வானில் வந்து ஆலயத்தில் சங்கிலி அறுப்பு! – இரு ஆண்கள் கைது; இரு பெண்கள் தலைமறைவு

வானில் வந்து ஆலயத்தில் சங்கிலி அறுப்பு!

வானில் வந்து ஆலயத்தில் சங்கிலி அறுப்பு! - இரு ஆண்கள் கைது; இரு பெண்கள் தலைமறைவு வானில் வந்து ஆலயத்தில் சங்கிலி அறுப்பு! - இரு ஆண்கள் கைது; இரு பெண்கள் தலைமறைவு | Chain snatched at temple & got arrested

வானில் வந்து ஆலயத்தில் சங்கிலி அறுப்பு!

யாழ்., தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தில் இன்று இடம்பெற்ற ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழாவில் அடியவர்களிடம் நகைகளைத் கொள்ளையிட்ட இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர், மேலும் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

கிளிநொச்சி பகுதியில் இருந்து வந்த நால்வர் இந்தக் கொள்ளையில் ஈடுபட்ட நிலையில் இரு ஆண்கள் கைதுசெய்யப்பட்டதுடன் பெண்கள் இருவர் தலைமறைவாகிய நிலையில் தேடப்பட்டு வருகின்றனர்.

தெல்லிப்பழை துர்க்காதேவி ஆலயத்தின் ஐந்தாவது கோபுரமான தலைவாசல் இராஜகோபுர கும்பாபிஷேக திருவிழா இன்று காலை இடம்பெற்றது.

திருவிழாவில் பங்கேற்ற அடியவர்கள் நால்வரிடம் தங்க நகைகள் அபகரிக்கப்பட்டன. அவர்கள் மூதாட்டி ஒருவரிடம் அவரை அச்சுறுத்தி தங்கச் சங்கிலி ஒன்றைக் கொள்ளையடித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் நகைகளைப் பறிகொடுத்த நால்வரும் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தனர். அதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஆண்கள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 33 மற்றும் 37 வயதுடைய இருவரும் வான் ஒன்றில் வருகை தந்துள்ளனர். அவர்களது கொள்ளைக்கு உதவியாக வந்த பெண்கள் இருவர் தலைமறைவாகியுள்ளனர்.

அவர்களைத் தேடும் பணி பொலிஸாரால் முன்னெடுக்கப்படுகின்றது.

சந்தேகநபர்கள் பயணித்த வான் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களிடமிருந்து கைச்சங்கிலி ஒன்றும், சங்கிலி ஒன்றும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

#SriLankaNews

Exit mobile version