இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைமைப் பதவி ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்குப் பின்னர் வெற்றிடமாக இருந்து வருகின்ற நிலையில், புதிய தலைவரைத் தெரிவுசெய்வதற்காக அக்கட்சியின் பொதுச்சபை எதிர்வரும் 30ஆம் திகதி புதன்கிழமை கூடவுள்ளது.
அக்கட்சியின் தலைவராகச் செயற்பட்ட ஆறுமுகன் தொண்டமான் 2020ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் திகதி காலமானார். அதன் பின்னர் தலைமைப் பதவியை யாருக்கு வழங்குவது என்பது தொடர்பில் பல்வேறு கருத்தாடல்கள் இருந்தபோதும், இதுவரை அப்பதவிக்கு யாரும் நியமிக்கப்படவில்லை.
எதிர்வரும் 30ஆம் திகதி கொட்டகலை சி.எல்.எப்பில் கூடவுள்ள பொதுச்சபையில் ஏனைய பதவிகளுக்குரிய உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்படவுள்ளனர்.
#SriLankaNews