2021 க்கான மத்திய வங்கி அறிக்கை அமைச்சரவைக்கு!

721187541parliamnet5

2021 ஆம் ஆண்டுக்கான மத்திய வங்கியின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

2021 ஆம் ஆண்டுக்கான இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கை நாணய சபையால் 29.04.2022 ஆம் திகதி நிதி அமைச்சருக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

நிதிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கமைய நாடாளுமன்ற அமர்வு இடம்பெறுமாயின், ஆண்டறிக்கை கிடைக்கப்பெற்று 14 நாட்களுக்குள் நிதி அமைச்சர் அவர்கள் குறித்த ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தல் வேண்டும்.

அதற்கமைய, 2021 ஆம் ஆண்டு இலங்கை மத்திய வங்கி ஆண்டறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்காக நிதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

#SriLankaNews

Exit mobile version