சீமெந்து விலை குறைப்பு!

download 22 1 2

சீமெந்து விலை அடுத்தவாரம் குறைக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது சந்தையில், சீமெந்து மூடை ஒன்று, 2,750 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

எவ்வாறிருப்பினும், அடுத்தவாரம், சீமெந்து மூடை ஒன்றின் விலையை, குறிப்பிடத்தக்க அளவில் குறைக்க எதிர்பார்ப்பதாக, சீமெந்து உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வீட்டுக்கடன் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், சீமெந்துக்கான கேள்வி தற்போது 50 சதவீதத்தால் குறைவடைந்துள்ளதாக சீமெந்து உற்பத்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதன் காரணமாக, நாட்டின் முன்னணி சீமெந்து உற்பத்தி நிறுவனம் ஒன்று, தமது நான்கு தொழிற்சாலைகளில், மூன்றை மூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

#srilanakaNews

Exit mobile version