யாழ்ப்பாணப் பெட்டகம் – நிழலுருக் கலைக்கூடம் உலக பண்பாட்டுத் தினத்தினை முன்னிட்டுமுப்பெருந்தமிழ்விழாவை நடாத்தவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(21)யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியின் சபாலிங்கம் அரங்கில் பிற்பகல் 2.30மணிக்கு யாழ் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா
தலைமையில் முப்பெருந்தமிழ்விழா இடம்பெறவுள்ளது.
பிரதம விருந்தினர்களாக யாழ்ப்பாண மாவட்டச் செயலாளர்
அ.சிவபாலசுந்தரன், தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் தலைவர் முனைவர்
க.சுபாஷினி ஆகியோரும் சிறப்பு விருந்தினர்களாக வடக்கு மாகாணக் கல்விப்பணிப்பாளர்,
தி.ஜோன் குயின்ரஸ் ,வட மாகாண
பண்பாட்டலுவல்கள் திணைக்கள
பிரதிப்பணிப்பாளர் ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா தமிழ்மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பின் பொறுப்பாளர்களான
முனைவர் மு.இறைவாணி,
முனைவர் மு.பாமா உள்ளிட்டோரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இதன்போது கலை கலாசார நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதுடன்
சேவைகள் செய்த பலருக்கும் விருதுகள் வழங்கிவைக்கப்படவுள்ளது.
Leave a comment