லட்சக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டித்த இலங்கை மின்சார சபை!

tamilni 167

கட்டணம் செலுத்தத் தவறிய பத்து லட்சம் வீடுகளுக்கான மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

இவ்வாறு மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்ட மின் பாவனையாளர்களில் பெரும்பான்மையானவர்கள் இலங்கை மின்சார சபையின் சேவையை பெற்றுக்கொண்டவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மொத்தமாக பத்து லட்சத்து அறுபத்து நான்காயிரம் வீடுகளது மின்சார இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

உரிய நேரத்தில் மின்சாரக் கட்டணங்களை செலுத்த தவறிய வாடிக்கையாளர்களது மின் இணைப்புக்களே இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நாடாளுமன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Exit mobile version