போதைவஸ்து பாவனைக்கு எதிராக சங்கானையில் கவனயீர்ப்பு!

IMG 20220821 WA0122

இன்றையதினம் சங்கானை பேருந்து நிலையத்திற்கு முன்னால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று நடைபெற்றது.

போதைவஸ்தினை ஒழிக்குமாறு கோரி இந்த போராட்டமானது முன்னெடுக்கப்பட்டது. பன்னாட்டு புகையிலை நிறுவனத்தின் வரி மோசடிக்கு உடந்தையாக இருந்தவர்களை அம்பலப்படுத்துங்கள், யாழில் தடை செய்யப்பட்ட போதை ஊசி மருந்து பாவனைக்கு எதிராக அரசே நடவடிக்கை எடு, மது நிறுவனங்களுக்கு இளைஞர்களின் எதிர்காலத்தை விற்காதே போன்ற வாசகங்கள் உள்ளடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பு முன்னெடுக்கப்பட்டது.

இப்போராட்டத்தில் சங்கானை பிரதேச இளைஞர் சம்மேளனத்தினர், வலி. மேற்கு பிரதேச சபையினர் மற்றும் இளைஞர் யுவதிகள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

#SriLankaNews

Exit mobile version