10 52
இலங்கைசெய்திகள்

இறுகும் யோஷித மீதான பிடி : ஒருமாத காலத்திற்குள் பாயப்போகும் வழக்கு

Share

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (mahinda rajapaksa)மகன் யோஷித ராஜபக்ச(yoshitha rajapaksa),இரத்மலானை, சிறிமல் பிரதேசத்தில் அமைந்துள்ள 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை வாங்கியது தொடர்பான குற்றப் பிரேரணையின் ஒரு பகுதியாக கைது செய்யப்பட்ட நிலையில் இன்று (27) அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.

எனினும் அவர் மீது ஒரு மாத காலத்துக்குள் பணச் சலவை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும் என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார (harshana nanayakkara)இன்று தெரிவித்துள்ளார்.

பிணை வழங்குவதனால் குற்றமற்றவர் என்று அர்த்தமில்லை

யோஷிதவிற்கு பிணை வழங்குவதனால் அவர் குற்றமற்றவர் என்று அர்த்தமில்லை எனவும் பிணைமுறி சட்டத்தின் விதிகளின் பிரகாரம் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கங்களைப் போன்று அரசாங்கம் செயற்படுவதாகவும், யோஷித விடயத்தில் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் தொடர்பில் சந்தேகம் எழுப்பப்படுவதாகவும் சிலர் நம்ப வைக்க முயற்சிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த சந்தேகங்கள் அனைத்தும் மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டவுடன் இன்னும் ஒரு மாதத்தில் நிவர்த்தி செய்யப்படும்,” என்றார்.

இந்த சம்பவம் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததாகவும், எனினும் அரசியல் காரணங்களுக்காக இந்த வழக்கில் சந்தேக நபராக அவர் பெயரிடப்படவில்லை என்றும் அவர் கூறினார். மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு முன் சந்தேக நபரிடம் இருந்து வாக்குமூலம் பதிவு செய்வது அவசியம் என அவர் மேலும் கூறினார்.

Share
தொடர்புடையது
24 669df6417f6df
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர்

திருட்டு வழக்கில் தேடப்பட்ட நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது – மூன்று பேர் சிக்கினர சுமார்...

images 3 3
செய்திகள்இலங்கை

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: மூளையாகச் செயல்பட்ட இஷாரா செவ்வந்திக்கு உதவியதாக பெண் சட்டத்தரணி கைது

பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவ படுகொலைக்கு மூளையாகச் செயற்பட்டதாகக் கருதப்படும் இஷாரா...

images 1 9
செய்திகள்இலங்கை

கென்யாவில் சிறிய ரக விமானம் விபத்து: 12 பேர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

கென்யாவின் கடற்கரைப் பகுதியிலிருந்து பயணித்த ஒரு சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதாக அந்நாட்டு விமானப் போக்குவரத்து...

images 3 2
இலங்கைசெய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விரைவில்: 2026 வரவு செலவுத் திட்டம் மக்கள் நலன் சார்ந்ததாக அமையும் என எதிர்பார்ப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசு, மாகாண சபைத் தேர்தலை இயலுமானவரை...