தேசபந்து தென்னகோனுக்கு எதிராக வழக்கு

tamilnaadi 5

பதில் பொலிஸ் அதிபர் தேசபந்து தென்னக்கோன் உட்பட்ட மூன்று பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக உடனடியாக வழக்குத் தொடருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சட்டத்தரணிகளின் சங்கம் சட்டமா அதிபரிடம் குறித்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

முன்னாள் இராணுவ சிப்பாயின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளனர் என்ற அடிப்படையில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட மூவருக்கும் எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு உயர்நீதிமன்றம் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டிருந்தது.

எனினும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளையும் தேசிய பொலிஸ் ஆணைக்குழு எடுக்கவில்லை. இந்த நிலையிலேயே சட்டமா அதிபரிடம் புதிய கோரிக்கையை சட்டத்தரணிகளின் சங்கம் முன்வைத்துள்ளது.

இந்நிலையில் குறித்த மூவர் மீதும் வழக்கை தாக்கல் செய்யவேண்டியது சட்டமா அதிபரின் கடமை என்று சட்டத்தரணிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

Exit mobile version