புதிய பாப்பரசரை சந்தித்த கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித்

22 8

கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித்(Malcolm Ranjith), புதிதாக நியமிக்கப்பட்ட பாப்பரசர் மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான அமெரிக்காவைச் சேர்ந்த கர்தினால் ரொபர்ட் பிரீவோஸ்டை சந்தித்துள்ளார்.

இந்தநிலையில், கர்தினால் மல்கம் ரஞ்சித் மற்றும் பாப்பரசர் ரொபர்ட் பிரீவோஸ்ட் ஆகியோர் சுமுகமான கலந்துரையாடல்களில் ஈடுபடும் புகைப்படங்களை, கொழும்பு கத்தோலிக்க மறைமாவட்டம், சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளது.

புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்காக வத்திக்கான் நகரில் உள்ள வத்திக்கான் அரண்மனையில் நடந்த கர்தினால்களி;ன் கூட்டத்தில் மல்கம் ரஞ்சித் பங்கேற்றிருந்தார்.

Exit mobile version