கண்டி மாவட்டத்தில் அடுத்த பெரும்போக நெல் உற்பத்திக்குத் தேவையான காபன் பசளையின் அளவை விட மேலதிகமான அளவு காபன் பசளை கையிருப்பில் உள்ளதாக கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் தெரிவித்தார்.
ஹஸலக்க கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்தார். ஹஸலக்க பிரதேசத்திலுள்ள 64 விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கலந்துரையாடல் ஒன்று அங்கு இடம் பெற்றது. அதன் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்.
கண்டி மாவட்டத்தில் நெல் உற்பத்திக்கு கொம்போஸ்ட் பசளை மெற்றிக் தொன் 10,676 தேவைப்படுகிறது.
ஆனால் இவை கண்டி மாவட்டத்தில் தயார் படுத்தப்பட்ட 23 332 மெற்றிக் தொன் கொம்போஸ்ட் பசளை கையிருப்பில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் நெல் உற்பத்திக்கான மிகப் பெரிய நீர்பாசனத் திட்டமான மினிப்பே திட்டத்தில் ஹெக்டேயர் 7500 ற்கும் மேற்பட்ட அளவு வயற் காணிகள் இருப்பதாகவும் அவற்றில் 15 000 ற்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாய உற்பத்தியில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
கண்டி மாவட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாயிகளது கொம்போஸ்ட் உற்பத்திக்கு மேலதிகமாக குண்டசாலை, அக்குறணை, போன்ற உள்ளூராட்சி நிறுவனங்களும் பொம்போஸ்ட் பசளை உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றன.
கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 45 கமனல சேவைகள் மத்திய நிலையங்கள் ஊடாக 4500 மெற்றிக் தொன்னுக்கும் அதிகமான அளவு தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதன் காரணமாக எமது தேவைக்கும் அதிகமான உற்பத்தி இடம் பெற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
#SrilankaNews
Leave a comment