கம்பஹா, யாகொட ரயில் நிலையத்துக்கு அருகில், கார் மீது ரயில் மோதியதில் காரில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இவ் விபத்து இன்று இடம்பெற்றுள்ளது.
கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி ரயிலே இவ்வாறு கார்மீது மோதியுள்ளது.
அப் பகுதியில் பாதுகாப்பு கடவை இல்லை எனவும், ரயில் ஒலி எழுப்பிக்கொண்டு வரவில்லை எனவும் மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
விபத்தின்போது கார் சாரதி மாத்திரம் பயணித்ததுடன் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். ரயில் மோதப்பட்ட கார் ரயில் நிலைய மேடை வரை இழுத்து சென்றுள்ளது.
#SriLankaNews