சர்வக்கட்சி அரசில் ஒருபோதும் இணையோம்!

sajith

” நாடாளுமன்ற உறுப்பினர்களை வளைத்துபோட்டு அமையும் சர்வக்கட்சி அரசில் தமது கட்சி ஒருபோதும் இணையாது.” – என்று ஐக்கிய மக்கள் சக்தி அறிவித்துள்ளது.

சர்வக்கட்சி அரசில் இணையுமாறு அழைப்பு விடுத்து அனைத்து எம்.பிக்களுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடிதம் அனுப்பியுள்ளார்.

ஜனாதிபதியின் இந்த நகர்வு ஏற்புடையது அல்ல என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண தெரிவித்தார்.

கட்சிகள் இருக்கையில், தனிப்பட்டவர்களை இலக்கு வைத்து அனுப்படும் கடிதம் பேரம் பேசுதலாகவே அமையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

Exit mobile version