இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ள பீரங்கி
கண்டி மன்னருக்கு சொந்தமான பீரங்கி மீண்டும் இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ளது.
குறித்த பீரங்கி கண்டி மன்னருக்கு சொந்தமானது என்பதுடன் டச்சு கிழக்கிந்திய கம்பெனி வீரர்களால் 1765 இல் கைப்பற்றப்பட்டது.
இந்த பீரங்கியுடன் இரண்டு வாள்கள், இரண்டு துப்பாக்கிகள், ஒரு கத்தி என்பனவும் உள்ளடங்குகின்றன.
நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தில் உள்ள இந்த போர்க்கருவிகள் இந்த ஆண்டு இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட உள்ளன.
Leave a comment