இலங்கைசெய்திகள்

கனேடிய தமிழர்களிடம் இலங்கை அரசு வேண்டுகோள்

02canadaletter flag superJumbo scaled
Share

இலங்கையின் நல்லிணக்க மற்றும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடாவில் உள்ள தமிழ் மக்கள் ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் என கனடாவிற்கான இலங்கை தூதரகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கனடாவின் ஸ்கார்புரோவில் உள்ள இந்து ஆலயத்தின் தேர்த்திருவிழாவில் கலந்துகொண்ட இலங்கை தூதரக அதிகாரி இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

கனடாவின் மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாநாகரசபை உறுப்பினர்கள் என 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள் உட்பட பெருமளவானவர்கள் இந்த தேர்த்திருவிழாவில் கலந்துகொண்டனர்.

இந்த நிகழ்வில் உரையாற்றிய இலங்கை தூதரக அதிகாரி, கனடாவில் உள்ள தமிழ்சமூகம் கனடாவின் பொருளாதாரம் மற்றும் கலாச்சாரத்தில் ஆற்றல்மிக்க சக்தியாக மாறியுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும், கனடாவின் வலுவான தமிழ் வர்த்தக சமூகமும், மிகச்சிறப்பான கல்வியை கொண்டுள்ள இளம்தமிழ் தொழில்துறையினரும் கனடா சமூகத்திற்குள் தமிழ் மக்களை இணைப்பதற்கான உந்துசக்தியாக உள்ளனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் அனைத்து சமூகத்தினருக்கும் சிறந்த எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ள நல்லிணக்க பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளில் கனடா தமிழ் சமூகம் தனது ஆக்கபூர்வமான பங்களிப்பை வழங்கவேண்டும் என தூதரக அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...