அரசியல்இலங்கைசெய்திகள்

கனடாவில் தமிழீழத்தை  உருவாக்க அனுமதி வழங்க வேண்டும் -அட்மிரல் சரத் வீரசேகர தொிவிப்பு!

Share
download 12 1 8
Share
கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோவுக்கு இலங்கைத்  தமிழர்கள் தொடர்பில் உண்மையில்அன்பு,அக்கறை  இருக்குமானால் கனடாவில் தமிழீழத்தை  உருவாக்க அனுமதி வழங்க வேண்டும்  எனத்தெரிவித்த முன்னாள் பொதுமக்கள்  பாதுகாப்பு அமைச்சரும் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழு தலைவரும் அரச தரப்பு எம்.பி.யுமான  ரியர் அட்மிரல் சரத் வீரசேகர  ,கனடாவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் பேசுவதற்குத்தான் யாருமில்லை எனவும் கூறினார்.
பாராளுமன்றத்தில்  செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற  பந்தயம்,சூதாட்ட விதிப்பனவு திருத்தச் சட்டமூல இரண்டாம் வாசிப்பு மீதான மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,
சர்வதேச ரீதியில் மிக கொடிய பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட  விடுதலைப்  புலிகள் அமைப்பை  முடிவுக்கு கொண்டு வந்து 14 ஆண்டுகளை கடந்துள்ளோம் பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இன நல்லிணக்கம் உருவாக்கப்  பட்டுள்ளது.
ஆனால் புலம் பெயர்ந்து வாழும் டயஸ்போராக்கள்  மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலைப்  புலிகள் அமைப்பின் நோக்கத்தை அடைய முயற்சிக்கிறார்கள்.இதற்காக ஐரோப்பிய நாடுகள் ஊடாக அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.
இவ்வாறான நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கனடா நாட்டு பிரதமர் வெளியிட்ட கருத்து முற்றிலும் தவறானது.கடனாவில் புலம் பெயர் தமிழர்கள் வளம் பெற்றுள்ளார்கள்.இவர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்வதற்காகவே  கடனாவின் பிரதமர் இலங்கை தொடர்பில் முறையற்ற கருத்தை தெரிவித்துள்ளார்.
இலங்கையை விடவும்  கனடா பாரிய நிலப்பரப்பை கொண்டுள்ள நாடு. .இலங்கைத் தமிழர்கள் தொடர்பில் கனடா   பிரதமருக்கு உண்மையில் அன்பு ,அக்கறை இருந்தால் கனடாவில் தமிழீழத்தை  உருவாக்க அனுமதி கொடுக்கலாம் ,கனடாவில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பில் கனடா பிரதமர் திரும்பிப்பார்க்க வேண்டும்.ஆனால் அங்கு இடம்பெற்ற இனப்படு கொலை தொடர்பில் பேசுவதற்குத்தான் யாருமில்லை.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் ஈழத்தை கோரவில்லை.தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரம் தான் இன்றும் ஈழத்துக்காக போராடுகிறார்கள்.நாடு முழுவதும் தமிழர்கள் சிங்களவர்களுடன் வாழ்கிறார்கள்.எங்கும் பிரச்சினையில்லை என்றார்.
#srilankaNews
Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
23 3
உலகம்செய்திகள்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டி.! ட்ரம்ப் அளித்த பதில்

அமெரிக்க(us) ஜனாதிபதியாக 3வது முறையாக போட்டியிடுவது குறித்துதான் தீவிரமாக யோசிக்கவில்லை என ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump)...

22 3
உலகம்செய்திகள்

மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தி மிரட்டும் பாகிஸ்தான்

இந்தியாவுடனான(india) பதற்றத்திற்கு மத்தியில், 2 நாட்களில் 2வது முறையாக ஏவுகணை சோதனை மேற்கொண்டதாக பாகிஸ்தான்(pakistan) தெரிவித்துள்ளது....

21 4
உலகம்செய்திகள்

53 ஆண்டுகள் கழித்து பூமியில் விழும் விண்கலம் : எப்போது தெரியுமா?

53 ஆண்டுகளுக்கு முன்பு விண்ணில் ஏவப்பட்டு தோல்வியடைந்த சோவியத் (Soviet Union) கால விண்கலம் விரைவில்...

25 2
இலங்கைசெய்திகள்

சட்டவிரோத வர்த்தகம் : இலங்கை எத்தனையாவது இடம் பிடித்துள்ளது தெரியுமா…!

சட்டவிரோத வர்த்தகத்தின் சவால்களை சமாளிக்க முடிந்த 158 நாடுகளை உள்ளடக்கிய சமீபத்திய தரவரிசைப்படி, டென்மார்க்(denmark) முதலிடத்திலும்,...