32
இலங்கைசெய்திகள்

மன்னாரில் உண்ணாவிரதத்தில் குதித்த வைத்தியர்

Share

மன்னாரில் உண்ணாவிரதத்தில் குதித்த வைத்தியர்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிந்துஜாவிற்கு நீதி கோரி இன்றைய தினம் (13) காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் ஏற்பாடு செய்த குறித்த போராட்டத்தில் நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இதேவேளை சிந்துஜாவின் மரணத்திற்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தை சேர்ந்த வைத்தியர் செந்தூரன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை(13) காலை உண்ணாவிரத போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

சிந்துஜாவின் மரணத்துடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து குறித்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கறுப்பு துணியால் தமது வாயை கட்டி கையில் கறுப்புக் கொடியை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த சிந்துஜாவுக்கு நீதி கேட்டு அந்த வைத்தியசாலை முன்பாக இன்று(13) காலை 9 மணிக்குக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இது தொடர்பில் மன்னார் மாவட்ட பொது அமைப்புகளின் ஒன்றியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

“மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த மாதம் 28ஆம் திகதி இறந்த சிந்துஜா மரியராஜின் மரணம் தொடர்பாக ஆரம்பகட்ட விசாரணைகள் நடைபெற்று ஒரு வாரம் கடந்த போதும் இதுவரை எதுவிதநடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

தாமதிக்கும் நீதி மறக்கப்பட்ட நீதியாகவே நாம் கருதுகின்றோம்.

ஆகவே, வைத்தியசாலையின் பொறுப்பற்ற செயற்பாட்டால் இறந்தவருக்கு நீதி வேண்டும். இப்படி இன்னொரு கொலை நடைபெறக்கூடாது.

எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்களைப் பாதுகாக்க நினைக்கும் மத்திய மற்றும் மாகாண சுகாதார அதிகாரிகளுக்கு எதிராக சிந்துஜாவுக்கு நீதி வேண்டி மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு முன்பாக இன்று(13) காலை 9 மணிக்குக் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளதால் இந்தப் போராட்டத்தில் தார்மீக அடிப்படையில் கலந்துகொள்ளுமாறு அழைப்பதுடன் அனைத்து உறவுகளையும் அணிதிரளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
MediaFile 10 2
செய்திகள்உலகம்

அமெரிக்காவில் டிக்டாக் தடை நீங்கியது! புதிய சுயாதீன ஒப்பந்தம் மூலம் தீர்வு!

அமெரிக்காவில் பில்லியன் கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டிக்டாக் (TikTok) செயலிக்கு விதிக்கப்படவிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. அதன்...

MediaFile 9 2
இலங்கைபிராந்தியம்

யாழ்ப்பாணம் வரும் டி20 உலகக்கிண்ணம்! வடபுல கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாகமான அறிவிப்பு!

இலங்கை மற்றும் இந்திய மண்ணில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள 10-ஆவது ஐசிசி (ICC) டி20 உலகக்கிண்ணக்...

IMG 20260123 WA0000
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு: போதைப்பொருளுடன் மேலும் ஒரு இளைஞர் கைது!

ஜிந்துப்பிட்டி பகுதியில் அண்மையில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பாக, கொழும்பு 13 பகுதியைச்...

Jhonson
இலங்கைசெய்திகள்

சதொச லொறி மோசடி: ஜோன்ஸ்டன் மற்றும் அவரது இரு மகன்களுக்கு ஜனவரி 30 வரை விளக்கமறியல் நீடிப்பு!

கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பதவி வகித்த காலத்தில், சதொச (Sathosa) நிறுவனத்திற்குச் சொந்தமான...