அமைச்சரவையில் மாற்றம்?

Cabinet444

அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ஏற்படுத்தப்படவுள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் ஒக்ரோபர் முதலாம் திகதி தொடக்கம் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்படவுள்ளது.

இந்த நிலையில் அடுத்த மாதம் அமைச்சரவையில் மாற்றத்தை ஏற்படுத்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச உத்தேசித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி முழுமையான அமைச்சரவை மாற்றம் அமையும் எனக் கூறப்படுகிறது.

பெரும்பாலும் வரவு– செலவு திட்டத்துப் பின் அமைச்சரவை மாற்றம் இடம்பெறுவது வழமையாகும்.

இந்த முறை அதற்கு முன்னதாக அமைச்சரவையை மாற்றியமைக்க இருப்பதாக அலரிமாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version