ரணில் தலைமையில் கூடிய அமைச்சரவை – மறுசீரமைப்பு யோசனைக்கு அனுமதி

23 649c2e88636d9

இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்துக்கு சிறிலங்கா அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

சிறிலங்கா நிதி அமைச்சர் என்ற ரீதியில் அதிபர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பான யோசனையை இன்று நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பித்ததையடுத்து, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான விசேட அமைச்சரவை கூட்டம் சிறிலங்கா அதிபர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று நடைபெற்றது.

கடன் மறுசீரமைப்பு

இதன்போதே, கடன் மறுசீரமைப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அதனைத் தொடர்ந்து உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பிலான விசேட கலந்துரையாடலொன்று ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் அதிபருக்கும் இடையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், குறித்த உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டம் வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற பொது நிதி குழுவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

அத்துடன், அன்றைய தினமே சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் விசேட கட்சித் தலைவர்கள் கூட்டமும் நடைபெறவுள்ளது.

Exit mobile version