நிதி நெருக்கடி காரணமாக தற்போது புதிய அமைச்சர்களை நியமிப்பது பொருத்தமானதல்ல என்று பொருளாதார நிபுணர்கள் அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டிய நிலையில் அமைச்சரவை நியமனம் தாமதிக்கும் என அரசாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
புதிதாக 12 அமைச்சர்களை நியமிக்க அரசாங்கம் முதலில் தீர்மானித்திருந்ததுடன், சர்வதேச நாணய நிதியத்தின் முதல் தவணை கிடைத்தவுடன் புதிய அமைச்சரவை நியமனம் செய்யப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
#SriLankaNews