கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 9 மாகாணங்களையும் வகைப்படுத்தி பஸ் சேவையை ஆரம்பிக்கும் யோசனையை தனியார் பஸ் உரிமையாளர் சங்கம் போக்குவரத்து அமைச்சிடம் முன்வைத்துள்ளது.
இது தொடர்பில் அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்க தலைவர் கெமுனு விஜயரட்ண குறிப்பிடுகையில்,
கொரோனாப் பரவல் தீவிரமாக அதிக தொற்றாளர்கள் அதிகம் அடையாளப்பட்டுள்ள மாகாணங்கள் சிவப்பு நிறத்திலும் குறைவான தொற்றாளர்கள் பதிவாக மாகாணங்கள் மஞ்சள் நிறத்திலும் தொற்றாளர்கள் இல்லாத மாகாணங்கள் பச்சை நிறத்திலும் அடையாளப்பட்டுள்ளன.
அதன்படி சிவப்பு நிறத்தில் அடையாளப்படுத்தப்படுள்ள மாகாணங்கள் ஆசன அடிப்படையில் 50 சதவீதமானோரே பயணிக்கவேண்டும்.
மஞ்சள் நிறத்தில் அடையாளப்பட்டுத்தப்பட்டுள்ள மாகாணங்களில் 100 சதவீதமானோரே பயணிக்க முடியும்.
பச்சை நிறத்தில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மாகாணங்கள் பஸ் சேவையில் ஆசனங்களுக்கு மேலதிகமாக பயணிகள் பயணம் செய்யும் நடைமுறையை உள்ளடக்கி யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் தளத்தப்பட்டதன் பின் மாகாணங்களுக்கிடையே போக்குவரத்து சேவையை ஆரம்பிக்க அரசு அனுமதி வழங்க வேண்டும்.
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் பஸ் கட்டணத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்த மடியாது. ஆகவே தனியார் பஸ் உரிமையாளர்கள் மற்றும் சேவையாளர்களுக்கு நிவாரணம் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Leave a comment