புத்தாண்டை முன்னிட்டு தமது சொந்த ஊர்களுக்கு செல்ல எதிர்பார்த்துள்ள மக்களின் வசதிக்காக 4,768 பேருந்துகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்தது.
கொழும்பு மத்திய பஸ் நிலையத்தில் இருந்து இந்த பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்துள்ளார்.
12 ஆம் திகதி வரை கொழும்பில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு பயணிப்பவர்களுக்கான போக்குவரத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 15 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரை வெளிமாவட்டங்களில் இருந்து கொழும்பிற்கும் பேருந்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
#srilanakNews
Leave a comment