பஸ் கட்டணம் குறையாது!

Bus fares

டீசல் விலை குறைக்கப்பட்டாலும் பஸ் கட்டணத்தை குறைக்க முடியாது என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணத்தை குறைக்க வேண்டுமாயின் டீசல் விலை 4% குறைக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

டீசல் மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவற்றின் விலை நேற்று (02) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விலை குறைப்பு அறிவிப்பை அடுத்து கெமுனு விஜேரத்ன மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Exit mobile version