கண்டி – மாத்தளை வீதியில் அலவத்துகொடை, பலகடுவ பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்று தரம்புரண்டு விபத்துக்குள்ளாகி உள்ளது. இன்று (17) அதிகாலை இவ்விபத்து இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பழைய பஸ் வண்டி ஒன்றில் மோதியே குறித்த பாரவூர்தி தடம்புரண்டுள்ளது. விபத்தில் பஸ் வண்டிக்கும் பாரவூர்திக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதுடன், சாரதியும் படுகாயமடைந்துள்ளார்.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அலவத்துகொடை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
#SrilankaNEws
Leave a comment