பற்றி எரிகிறது நாடு! உங்களுக்கு சமஷ்டி கேட்கிறதா? – சபையில் சீறிய தயாசிறி!
” நாடு கடும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. அனைத்து இன மக்களும் ஒன்றிணைந்தே போராடுகின்றனர். இப்படியான நெருக்கடியான சூழ்நிலையில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சமஷ்டி கோருகின்றார். இதில் என்ன நியாயம் உள்ளது, இந்நிலைமைக்கு உங்கள் அப்பாயும் பொறுப்பு கூறவேண்டும்.”
இவ்வாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை நோக்கி சரமாரியாக சொற்கணைகளைத் தொடுத்தார் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர.
நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தயாசிறி ஜயசேகர,
” கோ ஹேம் கோட்டா என கூறுவதால் பிரச்சினை தீராது, நாடாளுமன்றத்துக்கு பொறுப்பு இருக்கின்றது. எனவெ, மக்கள் எதற்கு வீதியில் இறங்கியுள்ளனர், அது பற்றி கவனம் செலுத்தி தீர்வை தேட வேண்டும்.
நாட்டை வங்குரோதது அடைய விடமுடியாது. சமஷ்டி தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பேசுகின்றார். சமஷ்டி கோரியா வடக்கு மக்கள் தற்போது போராடுகின்றனர்?
எரிபொருள் இல்லை, எரிவாயு இல்லை, .பொருட்களின் விலை அதிகரம், இவற்றுக்கு எதிராகவே வடக்கு தமிழ் மக்கள் போராடுகின்றனர். கிழக்கு முஸ்லிம் மக்களும் இதனையே வலியுறுத்துகின்றனர்.” – என்றார் .
#SriLankaNews