நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவின் வரவு – செலவுத் திட்ட உரையை, ‘பாட்டி வடை சுட்ட கதை’யென விமர்சித்துள்ளார் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” வரவு- செலவுத் திட்டம் ஊடாக நிவாரணங்கள் கிடைக்கும், நன்மைகள் பயக்கும் என்றே மக்கள் எதிர்ப்பார்த்தனர். ஆனால் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்கூட குறைக்கப்படவில்லை. அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. பெருந்தோட்ட மக்களுக்கு சலுகைகள் இல்லை.
மாற்றம் வரும் என நாம் நினைத்தோம். பயனற்ற பாதீடே முன்வைக்கப்பட்டுள்ளது. பாட்டி வடைசுட்ட கதைபோல, உரையை கேட்டுக்கொண்டிருந்தோம். மிகவும் மோசமான இந்த வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிக்க முடியாது.”- என்றார்.
#SriLankaNews