இலங்கைசெய்திகள்

அநுரவின் தேர்தல் கால வாக்குறுதிகள்! கேள்வி எழுப்பும் மகிந்த தரப்பு

9 33
Share

அநுரவின் தேர்தல் கால வாக்குறுதிகள்! கேள்வி எழுப்பும் மகிந்த தரப்பு

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அவ்வாறான நிலைமையில் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளை மாத்திரம் எவ்வாறு செயற்படுத்த முடியும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் கேள்வி எழுப்பினார்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் சுபீட்சமான காலப் பகுதியென்றால் அது மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைத்தான் கூறமுடியும். பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டு பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

அதனை யாரும் மறந்துவிட முடியாது. வரவு – செலவுத் திட்டத்தில் எம்மால் குறிப்பிடப்பட்ட அனைத்தையும் நாம் நிறைவேற்றினோம்.

ஆனால், அரசு தேர்தல் காலத்தில் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை.

அவ்வாறான நிலைமையில் வரவு – செலவுத் திட்ட முன்மொழிவுகளை மாத்திரம் எவ்வாறு செயற்படுத்த முடியும்? அவை வெறும் ஏட்டில் மாத்திரமே காணப்படுகின்றன.

மக்களை ஏமாற்றி போலியான வாக்குறுதிகளை வழங்கினார்கள். தற்போது அவ்வாறான வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத நிலையில் இருக்கிறார்கள். இதனை மக்களும் நன்கு உணர்ந்துள்ளார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Share
Related Articles
29 2
உலகம்செய்திகள்

செங்கடலில் அடுத்தடுத்து அமெரிக்க போர் விமானங்கள் விபத்து: உயிர் தப்பிய விமானிகள்!

செங்கடலில் அமெரிக்க போர் விமானம் ஒன்று விமானம் தாங்கி கப்பலில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில்...

26 4
உலகம்செய்திகள்

பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும்: ட்ரம்ப் செய்தியால் பரபரப்பாகும் இணையம்

அதிரவைக்கும் மிகப்பெரிய அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகும் என ட்ரம்ப் கூறியுள்ள விடயத்தால் இணையம் பரபரப்பாகியுள்ளது....

27 3
உலகம்செய்திகள்

அணு ஆயுத நாடுகள் 2024: இந்தியா எங்கே உள்ளது? – அதிர்ச்சி தரும் உண்மைகள்!

இந்தியா-பாகிஸ்தான் இடையே அதிகரித்து வரும் போர் பதற்றம் இருநாட்டு மக்களிடையே உச்சக்கட்ட விழிப்பு நிலையை ஏற்படுத்தியுள்ள...

28 3
உலகம்செய்திகள்

போரில் பாகிஸ்தான் வென்றால் அந்த இந்திய நடிகை வேண்டும் – மதகுரு சர்ச்சை பேச்சு

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 26 பேர் உயிரிழந்தனர்....