tamilni 398 scaled
இலங்கைசெய்திகள்

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரை பாராட்டும் பௌத்த துறவி

Share

விடுதலைப்புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளரை பாராட்டும் பௌத்த துறவி

தமிழீழ விடுதலைப்புலிகளின் காவற்துறை பொறுப்பாளர் நடேசனை முன்னாள் இராணுவச் சிப்பாயும் தற்போதைய பௌத்த பிக்குவுமான எகிரியே சுமன தேரர் புகழ்ந்து பாராட்டியுள்ளார்.

மிக இள வயதில் இராணுவத்தில் இணைந்து கொண்ட இவர் தான் கடமையாற்றிய காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் தம்மை கைது செய்து தடுத்து வைத்திருந்தனர் என தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

விடுதலைப்புலிகள் என்னை கைதுசெய்து பொலிஸ் பிரிவில் தடுத்து வைத்திருந்தனர்.

புலிகளின் காவற்துறை பொறுப்பாளர் நடேசன் என்னை மிகவும் அன்புடன் பார்த்துக் கொண்டார்.

தனக்கும் 17 வயதான மகன் இருப்பதாகவும், அவரும் ஒர் சிங்கள பெண்ணையே மணம் முடித்ததாகவும் நடேசன் என்னிடம் தெரிவித்தார்.

தமிழர் ஒருவரை மணம் முடித்த காரணத்தினால் தெற்கில் வாழ்ந்த அவரது மனைவியின் உறவினர்கள், அவரை ஒதுக்கிவிட்டதாக தெரிவித்தார்.

நடேசன் என்னை ஒரு கைதியை போன்று நடாத்தாது மிகவும் சுதந்திரம் கொடுத்து அவரது பிள்ளையைப் போன்று மனிதாபிமானத்துடன் நடத்தினார்.

கைது செய்து அழைத்துச் செல்லப்பட்ட தினமே நடேசன் எனக்கு ஆடைகள் முதல் அனைத்துப் பொருட்களையும் வாங்கிக் கொடுத்தார். சில மாதங்கள் விடுதலைப்புலிகளினால் தடுத்து வைக்கப்பட்ட போதிலும் எனக்கு அனைத்து விதமான வசதிகளும் வழங்கப்பட்டிருந்தன.

புலிகள் என்னை விடுவித்த பின்னர் இராணுவத்திலிருந்து விலகி துறவறத்திற்கு சென்றேன். இமய மலையில் சமாதியாவதே எனது நோக்கம் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைக்கு பொறுப்பாளராக இருந்த சு.ப தமிழ்ச்செல்வன் மறைவிற்கு பின்னர் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் நடேசனை அரசியல்துறைக்கு பொறுப்பாளராக நியமித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...