ஒற்றுமையை வலியுறுத்தி யாழில் இருந்து பௌத்த மத குரு நடைப்பயணம்

1679626691 jaffna 2

நாட்டில் சமாதானம் நல்லிணக்கத்தை வலியுறுத்தி அனைத்து இன மக்களும் ஒற்றுமையாக சந்தோஷமாக வாழ வேண்டி வெலிமட சதானந்த தேரர் யாழ்ப்பாணம் ஆரியகுளம் ஸ்ரீ நாக விகாரையிலிருந்து தெய்வேந்திர முனைவரை பௌத்த சின்னத்தை தாங்கியவாறு கால் நடையாக நடை பயணம் ஒன்றை இன்றுஆரம்பித்துள்ளார்.

நாட்டில் சமாதானம் ஒற்றுமையினை வலியுறுத்தி நடைபயணத்தை ஆரம்பித்துள்ளதாகவும் தனது தூர நோக்கமான செயற்பாட்டிற்கு அனைத்து மக்களும் ஆதரவினை வழங்க வேண்டும்.

நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் குல, மத பேதம் இன்றி ஒற்றுமையாகவும் நிரந்தர சமாதானத்துடன் வாழ வேண்டி பிரார்த்தித்து நேற்று காலை நயினா தீவு ஸ்ரீ நாக விஹாரையில் வழிபாடுகளை மேற்கொண்டு, ஆரியகுளம் நாக விகாரையில் இருந்து இலங்கையில் உள்ள அனைத்து பிரதேசங்களுக்கும் சென்று தெய்வேந்திர முனையில் தனது நடை பயணத்தை நிறைவு செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Exit mobile version