யாழ். வடமராட்சி கிழக்கில் புத்த பெருமானுடன் கரை ஒதுங்கிய மிதப்பை

tamilnih 52

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு – குடாரப்புப் பகுதியில் புத்தர் சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதப்பை ஒன்று கரை ஒதுங்கியுள்ளதால் அதனை மக்கள் பலரும் பார்வையிட்டு வருகின்றனர்.

குறித்த தெப்பம் நேற்று (08.01.2024) மாலை கரையொதுங்கியுள்ள நிலையில் அதில் மலையாள எழுத்து காணப்படுவதால் இது இந்தியாவில் இருந்து வந்திருக்கலாம் என்று மக்கள் சந்தேகிக்கின்றனர்.

அத்துடன், இது ஏதும் புத்தர் சிலை வைப்பதற்கான நடவடிக்கையா என்றும் மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை, கடந்த ஒரு மாத காலமாக வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் பல்வேறு வடிவிலான மிதக்கும் தெப்பங்கள் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version