கொழும்பில் இளம் பெண்களுடன் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி!
இலங்கைசெய்திகள்

கொழும்பில் இளம் பெண்களுடன் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி!

Share

கொழும்பில் இளம் பெண்களுடன் சுற்றிவளைக்கப்பட்ட விடுதி!

கொழும்பு – கிரிபத்கொட பகுதியில் விடுதியொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விடுதிகளை சுற்றிவளைத்த கிரிபத்கொட பொலிஸார் முகாமையாளர்களுடன் 5 பெண்களை கைது செய்துள்ளனர்.

மஹர நீதவான் நீதிமன்றில் பெறப்பட்ட தேடுதல் உத்தரவுக்கு அமைய பொலிஸாரால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மசாஜ் நிலையங்களில் ஒன்று கண்டி வீதியின் கலா சந்தியிலும் மற்றைய மசாஜ் நிலையம் மாகொல வீதி பகுதியிலும் சோதனையிடப்பட்டுள்ளது.

கலா ​​சந்தியில் உள்ள மசாஜ் நிலையத்தில் மூன்று பெண்களுடன் முகாமையாளர் ஒருவரும், மாகொல வீதி பகுதியில் உள்ள மசாஜ் நிலையத்தில் இரண்டு பெண்களுடன் முகாமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அம்பாறை, களனி மற்றும் கடவத்தை பிரதேசங்களில் வசிக்கும் 22 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...