கோட்டாபயவை பாதுகாப்புடன் அழைத்து வருக! – சட்டத்தரணி மைத்திரி

Gotabaya Rajapaksa

அகதிகள் போன்று நாடு விட்டு நாடு செல்லும் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச பாரிய ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக அதிபர் சட்டத்தரணி மைத்திரி குணரத்ன தெரிவித்துள்ளார்.

முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ச நாட்டிற்கு விஜயம் செய்வது பிரச்சினையல்ல எனவும் அரசாங்கத்தின் தலையீட்டின் ஊடாக கோட்டாபய ராஜபக்ச பூரண பாதுகாப்புடன் இலங்கைக்கு அழைத்து வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முழு கவனம் செலுத்த வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

#SriLankaNews

Exit mobile version