பாதுகாப்பாக அழைத்து வருக! – ஜனாதிபதியிடம் கோரிக்கை

Ranil1

கோட்டாபய ராஜபக்ச பாதுகாப்பாக நாடு திரும்பவும், அவருக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட வசதிகளையும் செய்து கொடுக்குமாறும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினால் இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்றிரவு நடைபெற்றது.

சர்வக்கட்சி அரசு உட்பட அடுத்தக்கட்ட வேலைத்திட்டங்கள் சம்பந்தமாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளன.

அத்துடன், கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பியதும், முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் அவருக்கு தேவையான பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பஸில் ராஜபக்ச, சாகர காரியவசம் உட்பட மொட்டு கட்சியின் பிரமுகர்கள் பலரும் சந்திப்பில் பங்கேற்றிருந்தனர்.

#SriLankaNews

Exit mobile version