1 17
இலங்கைசெய்திகள்

பிரதேச சபைத் தவிசாளர் பதவிக்கு ஆதரித்து வாக்களிக்க இலஞ்சம்! களுத்துறையில் சம்பவம்

Share

களுத்துறை- வலல்லாவிட பிரதேச சபையின் தவிசாளர் தெரிவிற்கான வாக்கெடுப்பில் ஆதரித்து வாக்களிப்பதற்காக இலஞ்சம் வழங்கப்பட்டுள்ள சம்பவமொன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைகயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நிரோஷன் பாதுக்க இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது, வலல்லாவிட பிரதேச சபைக்கான தவிசாளர் தெரிவின் போது தம்மை ஆதரித்து வாக்களிப்பதற்காக ஒரு தரப்பினரால் உறுப்பினர்களுக்கு தலா பதினைந்து லட்சம் ரூபா பேரம் பேசப்பட்டு, ஐந்து லட்சம் வரை முன்பணம் கொடுக்கப்பட்டுள்ளது

எனினும் அவ்வாறு முன்பணம் வாங்கிய பெண் உறுப்பினர் ஒருவர் இலஞ்சம் கொடுத்தவர்களுக்கு எதிர் அணியினருக்கு ஆதரவாக தனது வாக்கினை செலுத்தியுள்ளார்.

மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் ஊடாக குறித்த தகவலை அறிந்து கொண்ட இலஞ்சம் கொடுத்த தரப்பினர், தங்களை ஏமாற்றிய பெண் உறுப்பினருக்கு வழங்கிய முன்பணத்தை திருப்பித் தருமாறு அச்சுறுத்தல் விடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் நிரோஷன் பாதுக்க தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...