அரச நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இடையே இலஞ்ச வழக்குகள் அதிகரித்துள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அத்தோடு, அரச அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் இலஞ்சத்தைப் பெற்றுக்கொண்டு அதனைப் பகிர்ந்து கொள்வதாகவும் தகவல் கிடைத்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில், இலஞ்சம் வாங்குவதும், கொடுப்பதும் கடுமையான குற்றங்கள் என்றும் ஆணைக்குழுவின் பணிப்பாளர் கூறியுள்ளார்.
மேலும், இந்த விடயம் தொடர்பில் எதிர்காலத்தில் விழிப்புடன் இருப்பதாகவும், இலஞ்சம் வாங்குபவர்களும், கொடுப்பவர்களும் கைது செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.