மாதாவின் சிலை விசமிகளால் அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
நெடுந்தீவு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஐந்தாம் வட்டாரம் ஒற்றைப்பணை சந்தியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவமானது இன்று மதியம் 12 மணியளவில் நடைபெற்றுள்ளது.
நீண்ட காலமாக மக்களால் வணங்கப்பட்டு வந்த மாதா சிலை இவ்வாறு அடித்து உடைக்கப்பட்டுள்ளது.
மாதா சிலை உடைந்திருப்பதை கண்டறிந்த மக்கள் உடனடியாக நெடுந்தீவு பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
#SrilankaNews