வாய்க்கால் நீரில் மூழ்கி சங்கானையில் சிறுவன் உயிரிழப்பு

san

யாழ்ப்பாணம் சங்கானை தேவாலய வீதியை சேர்ந்த ஆறு வயதுச் சிறுவன் குளத்திற்கு செல்லும் வாய்க்காலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பிரதேசத்தை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

சங்கானை ஸ்தான அமெரிக்க மிசன் தமிழ்க் கலவன் பாடசாலையில் தரம் ஒன்றில் கல்வி பயிலும் ஆறு வயதுடைய நிறோஜன் ஸ்டீபன் என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.

நேற்று நண்பகலில் இருந்து சிறுவனை காணவில்லை என உறவினர்கள் தெரிவித்ததையடுத்து, அப்பிரதேச மக்கள் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர்.

கிராமத்தவர்களால் தொடர்ந்தும் சிறுவன் தேடப்பட்டுவந்த நிலையில், இரவு 9.30 மணியளவில் வாய்க்காலில் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version