பிக்குவின் வாகனத்தில் மதுபான போத்தல்கள்!!

பிக்குவின் வாகனத்தில் மதுபான போத்தல்கள்!!

பிக்குவின் வாகனத்தில் மதுபான போத்தல்கள்!!

கண்டியிலுள்ள பிரபல விகாரையின் பிக்கு ஒருவருக்குச் சொந்தமான அதிசொகுசு வாகனத்தில் இருந்தும், வர்த்தகர் ஒருவரின் வாகனமொன்றிலிருந்தும் 145 மதுபான போத்தல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பிக்குவின் வாகனத்திலிருந்து 25 மதுபான போத்தல்களும், வர்த்தகரின் வாகனத்திலிருந்து 120 மதுபான போத்தல்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

பத்து நாள்களுக்கு நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில், ஊரடங்கு காலத்தில் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக, இவ்வாறு மதுபானங்கள் கொண்டுசெல்லப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

அத்தோடு, கைதுசெய்யப்பட்ட வர்த்தகருக்கு சொந்தமாக மதுபானசாலையொன்று இருக்கின்றமையும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

Exit mobile version