60 வயதுக்குட்பட்டோருக்கு பூஸ்டர்- சுகாதார அமைச்சர்

New Project 57

நாட்டில் 60 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு, முன்னணி சுகாதார சேவை குழுக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு பூஸ்டர் டோஸ் அல்லது மூன்றாவது தடுப்பூசி வழங்க சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளதாக சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் புத்திக பத்திரண எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் இவ்வாறு பதில் வழங்கியுள்ளார்.

நாம் 14 மில்லியன் பைசர் தடுப்பூசிகளைப் பெறவுள்ளோம். உலக சுகாதார ஸ்தாபனம் 65 வயதுக்கு மேற்பட்டோருக்குச் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

இதற்கமைய, 60 வயதுக்குட் பட்டோருக்கு அதனைச் செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம் என அமைச்சர் ஹெகலிய தெரிவித்துள்ளார்.

Exit mobile version