இந்திய சூப்பர் ஸ்டார்களான அனில் கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோர் இன்று இலங்கை வந்தடைந்தனர்.
பிரபல ஆங்கில தொலைக்காட்சி தொடரான ‘தி நைட் மேனேஜர்’ ஹிந்தி தழுவலின் படப்பிடிப்புக்காக ஆதித்யா ராய் கபூர் இலங்கை வந்துள்ளார்.
இந்திய சூப்பர் ஸ்டார் அனில் கபூர் விடுமுறைக்காக வந்துள்ளார்.
இலங்கையின் சூழலியல் அழகை வெளிப்படுத்தும் ‘தி நைட் மேனேஜர்’ ஹிந்தி தழுவலின் பல அத்தியாயங்களை படமாக்க ஆதித்யா ராய் கபூர் வந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
65 வயதான அனில் கபூர் விடுமுறைக்காக இலங்கை வந்துள்ளார். பெந்தோட்டை கடற்கரையில் தனது இளமையைக் காட்சிப்படுத்திய போது எப்படி உடற்பயிற்சி செய்தார் என்பதை ட்விட்டரில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
#SriLankaNews #India