tamilni 134 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் சடலம்

Share

இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட இஸ்ரேலில் உயிரிழந்த இலங்கையரின் சடலம்

இஸ்ரேல் – ஹமாஸ் மோதலில் உயிரிழந்த இரண்டாவது இலங்கையர் சுஜித் யட்டவர பண்டாரவின் சடலம் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் இன்று (09.11.2023) காலை கட்டுநாயக்க விமான நிலைய விமான சரக்கு முனையத்தை வந்தடைந்துள்ளது.

இதன்போது சுஜித் யட்டவர பண்டாரவின் மனைவி ஜயனி மதுவந்தி, 13 வயது மகள், 09 வயது மகன் ஆகியோர் விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்தனர்.

அத்துடன் இலங்கைக்கான இஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் தினேஷ் பிரியந்த, முன்னாள் அமைச்சர் அருந்திக பெர்னாண்டோ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விமான நிலைய நிர்வாக அதிகாரி அசோக பிரேமசிறி ஆகியோர் உடன் இருந்தனர்.

உயிரிழந்தவரின் இறுதிக்கிரியைகள் வென்னப்புவ, துலாவெல, மடவலப்பிட்டி பொது மயானத்தில் எதிர்வரும் சனிக்கிழமை (11.11.2023) இடம்பெறவுள்ளதாக அவரின் மனைவி ஜயனி மதுவந்தி தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
6 18
இலங்கைசெய்திகள்

பாதாள உலகில் 18 பெண்கள்! வெளியான அதிர்ச்சித் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா உட்பட, இந்த வருடம் ஜனவரி 1 ஆம் திகதி முதல்...

5 18
இலங்கைசெய்திகள்

கொழும்பிலிருந்த செவ்வந்தியை தமிழர் பகுதிக்கு அழைத்து சென்ற சிஐடியினர்

குற்றப்புலனாய்வுத் திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி, கிளிநொச்சிக்கு மேலதிக விசாரணைகளுக்காக அழைத்துச்...

4 18
இலங்கைசெய்திகள்

சிங்கள மொழி தெரியாதமையால் ஆபத்தான கும்பலிடம் சிக்கிய தக்சி

குற்றக் கும்பலுடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி கும்பலிடம் சிங்களம் தெரியாத நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தக்சி...

3 18
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் நெருங்கிய தொடர்பில் முக்கிய பிரமுகர்கள்! வெளிவரும் தகவல்கள்

நேபாளத்தில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியுடன் பல்வேறு முக்கிய பிரமுகர்கள் நெருங்கிய...