இலங்கைசெய்திகள்பிராந்தியம்

வவுனியாவில் ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் மீட்பு!

Share
IMG 20220331 WA0120
Share

வவுனியா, தவசிக்குளம் பகுதியில் வீடு ஒன்றில் இருந்து குடும்பஸ்தரின் சடலம் பொலிஸாரால் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரே நாளில் இரு ஆண்களின் சடலங்கள் வவுனியாவில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.

தவசிக்குளம் பகுதியில் வசித்து வந்த குடும்பம் ஒன்றில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக மனைவியும் அவருக்குத் துணையாக பிள்ளையும் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சென்றிருந்த நிலையில் குடும்ப தலைவர் மட்டும் வீட்டில் நின்றுள்ளார்.

மனைவியும் பிள்ளையும் வைத்தியசாலையில் இருந்து வீடு சென்றபோது குறித்த குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார் என்று மனைவியால் கிராம அலுவலருக்கு வழக்கப்பட்ட தகவலையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம அலுவலர் மற்றும் பொலிஸார் சடலத்தைப் பார்வையிட்டதுடன் பொலிஸார் சடலத்தை மீட்டனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அப்பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய மருதலிங்கம் நிமல்ராஜ் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார்.

இதேவேளை, வவுனியா சிவபுரம் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயம் ஒன்றில் இருந்தும் 35 ஆண் ஒருவரின் சடலம் இன்று காலை மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

16 7
உலகம்செய்திகள்

ஹவுதிகளுக்கு பேரிழப்பு : யேமனின் முக்கிய விமான நிலையத்தை தகர்த்து அழித்தது இஸ்ரேல்

யேமனின் தலைநகரிலுள்ள சர்வதேச விமான நிலையத்தை வான்வழித் தாக்குதல்கள் மூலம் தகர்த்து அழித்துள்ளதாக இஸ்ரேல் இராணுவம்...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...