வடமாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாமொன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.
இன்று புதன்கிழமை(17) காலை 8.30 மணியளவில் நல்லூர் பிரதேச செயலகத்தில் இரத்ததான முகாம் ஆரம்பித்தது.
குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட செயலாளர் அ.சிவபாலசுந்தரன், நல்லூர் பிரதேச செயலாளர் எழிலரசி அன்ரன் யோகநாயகன், அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் நிர்வாகிகள், அபிவிருத்தி உதிரக்கொடையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இரத்தவங்கிகளில் நிலவும் இரத்தத்துக்கான தட்டுப்பாடு நிலையினை கருத்தில் கொண்டு குறித்த சங்கத்தினரால் முல்லைத்தீவு மாவட்டத்தில் இரத்த தான முகாம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இரண்டாவது சமூகப்பணியாக இது இடம்பெற்றது.
தொடர்ந்து ஏனைய மாவட்டங்களிலும் இப் பணி விரைவாக ஒழுங்குபடுத்தப்பட்டவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
#srilankaNews
Leave a comment