30ஆம் திகதி ‘பிம்ஸ்டெக்’ மாநாடு! – இலங்கை வந்தார் செயலாளர்

‘பிம்ஸ்டெக் மாநாடு

‘பிம்ஸ்டெக்’ அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு எதிர்வரும் 30 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.

இலங்கை, இந்தியா, பங்களாதேஷ், நேபாளம், பூட்டான், மியன்மார் மற்றும் தாய்லாந்து ஆகிய 7 நாடுகள் ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

பிம்ஸ்டெக் அமைப்பின் அரச தலைவர்கள் மாநாடு கடைசியாக 2018 இல் நேபாளம் தலைநகர் காத்மண்டுவில் நடைபெற்றது. இம்முறை இலங்கையில் நடைபெறுகின்றது.

மாநாட்டில் பங்கேற்பதற்காக தாய்லாந்து பிரதமர் இலங்கை வரவுள்ளார். ’பிம்ஸ்டெக்’ அமைப்பின் அடுத்த தலைமைப் பொறுப்பை தாய்லாந்தே ஏற்கவுள்ளது. அந்தப் பதவியைத் தாய்லாந்து பிரதமர் பொறுப்பேற்பார். ஏனைய நாடுகளின் பிரதமர்கள் ‘காணொளி’ தொழில்நுட்பம் ஊடாகவே மாநாட்டில் பங்கேற்பார்கள்.

அரச தலைவர்கள் மாநாடு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் எதிர்வரும் 30ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும்.

அத்துடன், ‘பிம்ஸ்டெக்’ அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு – கலந்துரையாடல் எதிர்வரும் 29ஆம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டில் மண்டபத்தில் நடைபெறும். 7 நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் கொழும்பு வருவார்கள்.

அதேபோல் வெளிவிவகார அமைச்சின் செயலாளர்களின் கலந்துரையாடல் – சந்திப்பு இன்று நடைபெறும்.

மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் நாளைமறுதினம் இலங்கை வரவுள்ளார். 30ஆம் திகதிவரை அவர் நாட்டில் தங்கியிருப்பார்.

பிம்ஸ்டெக் அமைப்பின் பொதுச்செயலாளர் இன்று இலங்கை வந்தடைந்தார்.

#SriLankaNews

Exit mobile version