கொழும்பில் நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

Share

கொழும்பில் நட்சத்திர ஹோட்டலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் யுவதியொருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படும் கோடீஸ்வர வர்த்தகர் ஒருவர் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவின் பொலிஸ் குழுவினால் நேற்று முன்தினம் (17) கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளுக்கு மாணவர் விசாவில் இளைஞர்களை மேலதிக கல்விக்காக அனுப்பும் நிறுவனத்தை கொழும்பில் நடத்தி வந்த கோடீஸ்வர வர்த்தகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளானதாக கூறப்படும் யுவதியும் அந்த நிறுவனத்தில் பணிபுரிபவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொழும்பில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் குறித்த நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த விசேட கலந்துரையாடலில் கலந்துக்கொள்ளுமாறு சந்தேகத்திற்குரிய கோடீஸ்வர வர்த்தகர் குறித்த யுவதிக்கு அறிவித்துள்ளார்.

அவரின் அறிவிப்பின் பேரில் இளம் யுவதி நட்சத்திர ஹோட்டலுக்கு சென்ற நிலையில், சந்தேகநபரால் அறையொன்று முன்பதிவு செய்யப்பட்டு இளம் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இளம் பெண் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவினர் முறைப்பாடு செய்த நிலையில், முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு சந்தேகத்தின் பேரில் கோடீஸ்வர வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட யுவதி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த யுவதி தன்னுடன் விருப்பத்துடன் வந்ததாக சந்தேகநபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...