tamilni 431 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் பெரிய வெங்காயத்தின் விலை

Share

இலங்கையில் வேகமாக அதிகரிக்கும் பெரிய வெங்காயத்தின் விலை

இலங்கை சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 650 ரூபாவை தாண்டியுள்ளது.

வெங்காய ஏற்றுமதியில் முன்னணியில் உள்ள இந்தியா, கடந்த டிசம்பர் 8ஆம் திகதி முதல் பெரிய வெங்காயம் ஏற்றுமதியை தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதால் வெங்காய விலை உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த தடை அடுத்த வருடம் மார்ச் மாதம் 31ஆம் திகதி வரை அமல்படுத்த இந்திய அரசு முடிவு செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவில் பெரிய வெங்காயம் உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் வெங்காயத்தின் விலை அதிகரித்துள்ளதையடுத்து விலையை கட்டுப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதனால், இலங்கை, பங்களாதேஷ், மலேசியா, நேபாளம், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போன்ற இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் பெரிய வெங்காயத்தின் விலை பெருமளவு அதிகரித்துள்ளன.

இலங்கையின் நுகர்வோரின் வருடாந்தம் பெரிய வெங்காயத்தின் தேவை சுமார் 280,000 மெற்றிக் தொன்களாகும். இந்த நாட்டில் சராசரியாக பெரிய வெங்காய உற்பத்தி சுமார் 125,000 மெட்ரிக் தொன்களாகும்.

மீதமுள்ள தேவையை இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்வதன் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது.

மழை, உரத் தட்டுப்பாடு, உரங்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் விவசாயிகள் கடந்த பருவத்தில் பெரிய வெங்காயச் செய்கையை கைவிட்டதால் 2023ஆம் ஆண்டு அறுவடை 7851 மெற்றிக் தொன்களாக குறைந்துள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...