தமிழ் அரசியல் கைதி உட்பட இரு கைதிகளுக்கு சிறந்த பெறுபேறு!

தற்போது வெளியாகியுள்ள க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளில் இரு சிறைக் கைதிகள் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர்.

இதனை சிறைச்சாலை பேச்சாளரும் சிறைச்சாலை ஆணையாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு கொழும்பு மகசின் மற்றும் வட்டரெக்க சிறைச்சாலைகளில் அமைக்கப்பட்ட பரீட்சை நிலையங்களில் 4 கைதிகள் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

இவர்களில் தமிழ் அரசியல் கைதி ஒருவரும் மற்றுமொரு கைதியும் சிறந்த பெறுபேறுகளை பெற்று சித்தியடைந்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரில் சிறையிலுள்ள கைதிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களை நற்பிரஜைகளாக சமூகத்தில் விடுவிப்பது சிறைச்சாலைகள்  திணைக்களத்தின் முக்கியமான கடமைகளில் பிரதானமானதாகும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version