23 653c88535405b
இலங்கைசெய்திகள்

அம்பேபிட்டிய சுமன தேரருக்கு எதிராக டக்ளஸ் காட்டம்

Share

அம்பேபிட்டிய சுமன தேரருக்கு எதிராக டக்ளஸ் காட்டம்

தர்மத்தை போதிக்க வேண்டிய சிலரின் இழிவான வார்த்தைகளும் செயற்பாடுகளும் வேதனையளிப்பதாகவும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட விகாராதிபதி அம்பேபிட்டிய சுமன தேரரின் அண்மைக்கால செயற்பாடுகள் தொடர்பாக நேற்று(27.10.2023) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

“துரதிஷ்டவசமாக இந்த நாட்டிலே இவ்வாறான பிரகிருதிகள் அனைத்து தரப்பிலும் இருக்கின்றனர் என்பது வேதனைமிகு யாதார்த்தமாக விளங்குகின்றது.

இந்த நாடு இன்றளவும் மீளமுடியாமல் தவிப்பதற்கு பிரதான காரணமான கடந்த கால யுத்தம் தோன்றுவதற்கு இரண்டு தரப்பிலும் இருந்த இவ்வாறான பிரகிருதிகளின் கருத்துக்களும் செயற்பாடுகளுமே காரணம் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

அதேபோன்று உலகிற்கு சாந்தியையும் சமாதானத்தையும் போதிக்க வேண்டியவர்களின் இவ்வாறான இழிவான செயற்பாடுகள் தொடர்பில் மரியாதைக்குரிய பௌத்த பீடங்கள் அக்கறை செலுத்த வேண்டும். இந்த நாட்டில் சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானதாகவே இருக்க வேண்டும்.

காவி உடை கவசமாக பயன்படுத்தப்படுவதை சட்டத்தை பாதுகாக்க வேண்டிய தரப்புக்கள் அனுமதிக்க கூடாது. மதகுரு என்று சொல்லப்படுகின்ற குறித்த நபரின் செயற்பாடுகள் மற்றும் பின்னணிகள் தொடர்பாக பல்வேறு சந்தேகங்கள் இருக்கின்றன.

இவை அனைத்தும் விரிவாக ஆராய்ந்து விஷக் கிருமிகள் அனைத்தும் களைக்கப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும்.

இதுதொடர்பாக, எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதியிடம் வலியுறுத்தவுள்ளதுடன் அமைச்சரவையிலும் பிரஸ்தாபிப்பதற்கு எதிர்பார்த்துள்ளேன்.

யாதார்த்தினை புரிந்து கொண்டு ஆரோக்கியமான எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தலைமையிலான எமது அரசாங்கம் விரைவில் இவ்வாறான செயற்பாடுகளை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது ” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
bus bike accident 1
இலங்கை

தாயையும் மகனையும் காவுகொண்ட கோரவிபத்து!

பகமூண, தமன பகுதியில், பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர்...

கடூழிய சிறைத்தண்டனை
இலங்கை

சிறுமி துஸ்பிரயோகம் – சந்தேக நபருக்கு வவுனியா நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு.

கடந்த 2015, 2016 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வவுனியா, தரணிக்குளம் பிரதேசத்தில் தாயினால் கைவிடப்பட்ட தந்தையின்...

பேருந்து கவிழ்ந்து விபத்து
இலங்கை

பேருந்து கவிழ்ந்து விபத்து – மஹகொடையாய பகுதியில் சம்பவம்!

மொனராகலையிலிருந்து தனமல்வில நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து ஒன்று புத்தல –...

ரத்மலானா சைமா
இலங்கை

பேராதனை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டார் ‘ரத்மலானா சைமா’

‘ரத்மலானே சைமா’, மலேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கை கொண்டுவரப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக பேராதனை காவல்துறையினரிடம்...