கிழக்கில் பறிபோகும் தமிழரின் நிலங்கள்
இலங்கைசெய்திகள்

கிழக்கில் பறிபோகும் தமிழரின் நிலங்கள்

Share

கிழக்கில் பறிபோகும் தமிழரின் நிலங்கள்

மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு பகுதிகளில் கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகள் அதிதீவிரமாக பெரும்பான்மை இனத்தவரால் அபகரிக்கப்பட்டு வருவதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

2019 ஆம் ஆண்டு அகற்றப்பட்ட புத்த விகாரை ஒன்று மீளவும் நிறுவப்பட்டு நேற்றைய தினம்(05.08.2023) விசேட பௌத்த நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை அடுத்து மாதவன மயிலத்தமடு பகுதிக்கு விரைந்து வந்த பெரும்பான்மை இனத்தவர்களை சேர்ந்த பலருக்கு கால்நடைகளுக்காக ஒதுக்கப்பட்ட காணிகளும் துண்டு துண்டாக பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மாதவனை மயிலத்தமடு பகுதியில் இருக்கும் காணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் கால்நடைக்கலுக்காக ஒதுக்கப்பட்ட காணியாக இருக்கின்ற காரணத்தினால், பண்ணையாளர்கள் குறித்த காணி விடயம் சம்பந்தமாக தங்களது பிரச்சினைகளை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.

எனினும் மேல் நீதிமன்றம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றங்கள் போன்றவற்றில் தடை உத்தரவு காணப்படுகின்ற போதிலும் நீதிமன்ற தடை உத்தரவை மீறி பெரும்பான்மை இனத்தவர்கள் புத்த விகாரை அமைத்து சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளுவது பெரும் சவாலையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் அண்மையில் மட்டக்களப்பு விஜயம் செய்த பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராஜாங்க அமைச்சர்கள் அனைவரது கவனத்திற்கு கொண்டு சென்றும் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய குடியேற்றம் இன்றுவரை இடம் பெற்றுக் கொண்டிருப்பதாக பண்ணையாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தொடர்ச்சியாக இந்த நிலை இடம்பெருமையானால் ஒரு இன முறுகளை ஏற்படுத்த கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

ஆகவே மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் கால்நடைகளை பாதுகாக்க வேண்டும் என்றும் பண்ணையாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...