கொழும்பு, மட்டக்குளி பகுதியில் நேற்றிரவு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞர் உயிரிழந்துள்ளார்.
26 வயது இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த துப்பாக்கிதாரியொருவர், துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இதனையடுத்து, காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் கூட்டிணைந்த திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு இடையிலான மோதல் நிலைமையே இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணமென பொலிஸார் தெரிவித்தனர்.
#SriLankaNews

